BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருநங்கைகள் உரிமைகள் குறித்து மசோதாவுக்கு எதிர்ப்பு

திருநங்கைகள் உரிமைகள் குறித்து மசோதாவுக்கு எதிர்ப்பு

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்த மசோதாவால் திருநங்கைகளின் உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா, உண்மையில் திருநங்கைகளின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

திருநங்கைகள் தாமே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களின் கருத்துகளை அவசியமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட உள்ள சமூகத்தின் கருத்துகளை கேட்காமல் சட்டத்திருத்தங்களை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.

திருநங்கைகளுடன் நேரடி கலந்துரையாடல் நடத்தி, அவர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஒருமித்த முடிவை எடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மசோதா குறித்து விரிவான பரிசீலனை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"