2023ஆம் ஆண்டு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கவனயீனமாக வாகனத்தைச் செலுத்தி விபத்து ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சீராய்வு செய்யுமாறு கோரி அவர் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார ரணசிங்க முன்னிலையில் இன்று (26) இம்மனு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.
இரு தரப்பு சமர்ப்பணங்களும் நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பை அறிவிப்பதற்காக நீதிபதி இவ்வாறு திகதி குறித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக