BREAKING
மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் இராஜினாமா வீதிகளை ஆக்கிரமிக்கும் மாடுகள் ; விபத்துகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு ரவி செனவிரத்னவின் மனு மீதான தீர்ப்பு திகதி அறிவிப்பு டயானா கமகே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் இன விடுதலைக்காகப் போராடிய இனம் ; நாடாளுமன்றில் சாணக்கியன் எம்பி மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் இராஜினாமா வீதிகளை ஆக்கிரமிக்கும் மாடுகள் ; விபத்துகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு ரவி செனவிரத்னவின் மனு மீதான தீர்ப்பு திகதி அறிவிப்பு டயானா கமகே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் இன விடுதலைக்காகப் போராடிய இனம் ; நாடாளுமன்றில் சாணக்கியன் எம்பி

இன விடுதலைக்காகப் போராடிய இனம் ; நாடாளுமன்றில் சாணக்கியன் எம்பி

இன விடுதலைக்காகப் போராடிய இனம் ; நாடாளுமன்றில் சாணக்கியன் எம்பி

இன விடுதலைக்காகப் போராடிய இனம் இன்று தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையைப் பெற்றுக்கொள்வதற்காகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியது என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் அவர்  மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் நிலவும் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வை வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு தீர்வு வழங்கப்படாவிட்டால் எமது மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொண்டுவரும் மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்ந்து தீர்க்கப்படாமல் நீடித்தால், பாதிக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய சூழல் உருவாகும் எனவும் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"