BREAKING
மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் இராஜினாமா வீதிகளை ஆக்கிரமிக்கும் மாடுகள் ; விபத்துகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு ரவி செனவிரத்னவின் மனு மீதான தீர்ப்பு திகதி அறிவிப்பு டயானா கமகே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் இன விடுதலைக்காகப் போராடிய இனம் ; நாடாளுமன்றில் சாணக்கியன் எம்பி மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் இராஜினாமா வீதிகளை ஆக்கிரமிக்கும் மாடுகள் ; விபத்துகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு ரவி செனவிரத்னவின் மனு மீதான தீர்ப்பு திகதி அறிவிப்பு டயானா கமகே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் இன விடுதலைக்காகப் போராடிய இனம் ; நாடாளுமன்றில் சாணக்கியன் எம்பி

இலங்கையை தாக்கும் அபாயம்; 'கானி' புயலுடன் அம்பர் எச்சரிக்கை!

இலங்கையை தாக்கும் அபாயம்; 'கானி' புயலுடன் அம்பர் எச்சரிக்கை!

மலேசியாவுக்கு வடக்கே உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி, வங்காள விரிகுடாவில் 'கானி' (Kaani)) புயலாக வலுப்பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

தற்போதைய கணிப்புகளின்படி டிசம்பர் 5ஆம் திகதி இரவு திருகோணமலை ஊடாக இலங்கையைக் கடந்து வவுனியா மன்னார் புத்தளம் வழியாக அரபிக் கடலை நோக்கி நகரக்கூடும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

எனினும் இதன் பாதை தமிழ்நாடு நோக்கி மாறவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கையின் மேற்கு சபரகமுவ மத்திய, ஊவா வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25) மாலை மற்றும் இரவில் 100 மி.மீ.க்கு மேல் கனமழையுடன் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், கடற்பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்பதால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"