BREAKING
விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்! யாழில் சொகுசு காருக்குள் இருவர் அரங்கேற்றிய சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு திருமணத்தை மீறிய உறவால் குழந்தை பெற்ற தாய் ; சவுதியில் பெண்ணுக்கு கிடைத்த தண்டனை சனிபகவானின் ஆசியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவங்கதான் விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்! யாழில் சொகுசு காருக்குள் இருவர் அரங்கேற்றிய சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு திருமணத்தை மீறிய உறவால் குழந்தை பெற்ற தாய் ; சவுதியில் பெண்ணுக்கு கிடைத்த தண்டனை சனிபகவானின் ஆசியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவங்கதான்

சனிபகவானின் ஆசியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவங்கதான்

சனிபகவானின் ஆசியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவங்கதான்

நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகக் கருதப்படுகிறது இது ஒவ்வொரு ராசியைக் கடந்து செல்ல சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. டிசம்பர் 11 அன்று, மீன ராசியில் சனி பகவான் வக்ர நிலையிலிருந்து நேரடி இயக்கத்திற்கு மாறுகிறார்.

இந்த நிலை ஜூன் 2027 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ரிஷபம்:சனிபகவான் நேரடி இயக்கத்தைத் தொடங்குவது, ரிஷப ராசிக்காரர்களுக்கு, குறிப்பாக அவர்களின் தொழில் வாழ்க்கையில், சிறப்பான முன்னேற்றங்களைக் கொண்டுவரக்கூடும். பணியில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் அல்லது சிறந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். இது அவர்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிகளவு செல்வத்தை குவிக்க முடியும், மேலும் அவர்களின் முதலீடுகள் அவர்களுக்கு பெரும் லாபத்தைத் தரும். இதனால் அவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் முயற்சியில் இப்போது மிகவும் வேகமாக இருப்பார்கள்.

கன்னி: வருமானத்திற்கும் செலவிற்கும் இடையே சிறந்த சமநிலையை ஏற்படுத்த வாய்ப்பு உருவாகலாம். அதே வேளையில், அவர்களின் தொழில்முறை முயற்சிகளுக்கு அதிக அங்கீகாரம் கிடைக்கக்கூடும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் மற்றும் அவர்களின் புத்திக்கூர்மை அதிகரிக்கும். பணியிடத்தில் அவர்களின் செயல்திறனில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இந்த காலகட்டத்தில் அவர்களின் நிதிநிலை வலுவடையும். காதல் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

துலாம்:  அவர்களின் தொழில் மற்றும் வியாபாரத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், வேலையில் சிறப்பான வெற்றியையும் தொழில் வாழ்க்கையில் வளர்ச்சியையும் அவர்கள் அடையலாம். அவர்களின் பொருளாதார நிலை மேம்படலாம் மற்றும் வேலையில்லாதவர்கள் விரும்பிய வேலைகளை எதிர்பார்க்கலாம்.வணிகர்கள் பல்வேறுபுதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது சரியான காலகட்டமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் புதிய வேலையில் சேர விரும்பினால், எந்த பிரச்சனையும் இல்லாமல் புதிய வேலையில் சேரலாம். சனிபகவானின் ஆசீர்வாதத்தால் அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்:இந்த நேரத்தில் அவர்களின் புதிய முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இது சரியான காலகட்டமாகும். அவர்களின் தொழில் வாழ்க்கையில், கடின முயற்சிகள் காரணமாக பெரும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், மேலும் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை ஏற்படும். மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் சிறந்த முடிவுகளை எதிர்பார்க்கலாம் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றிகரமாக பங்கேற்கலாம். கூட்டு வணிகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில், அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"