குஜராத் மாநிலத்தின் தாபி மாவட்டத்தில் உள்ள அம்பாக் கிராம ஆசிரமப் பள்ளியில், இரவு உணவின் போது ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் அதிர்ச்சிகரமான வன்முறையாக மாறியுள்ளது. ஊறுகாய் எடுத்துத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த 15 வயது மாணவி, உணவகத்தில் இருந்த கத்தியை மறைத்து எடுத்துச் சென்று, கைகழுவச் சென்ற தனது தோழியை குளியலறை அருகே தாக்கியுள்ளார். கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதுடன், கைகள் மற்றும் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலத்த காயமடைந்த மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய மாணவி கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பள்ளி வளாகங்களில் மாணவர்களின் மனநலம், கோபக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
செய்திகள்
ஊறுகாய் தகராறால் கொடூரம்: வயது மாணவி தோழியை கத்தியால் தாக்கி கைது
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக