BREAKING
தினமும் புஷ்-அப்ஸ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? அடிக்கடி தலைசுற்றுகிறதா? சாதாரணம் என அலட்சியம் வேண்டாம்; பின்னால் இருக்கும் முக்கிய காரணங்கள் இதோ! 15 வீத பேருந்துக் கட்டண உயர்வுக்கு அனுமதி கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தல் ஊறுகாய் தகராறால் கொடூரம்: 15 வயது மாணவி தோழியை கத்தியால் தாக்கி கைது ஆப்கானிஸ்தானில் அரசு அதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தலிபான் அரசு தடை தினமும் புஷ்-அப்ஸ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? அடிக்கடி தலைசுற்றுகிறதா? சாதாரணம் என அலட்சியம் வேண்டாம்; பின்னால் இருக்கும் முக்கிய காரணங்கள் இதோ! 15 வீத பேருந்துக் கட்டண உயர்வுக்கு அனுமதி கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தல் ஊறுகாய் தகராறால் கொடூரம்: 15 வயது மாணவி தோழியை கத்தியால் தாக்கி கைது ஆப்கானிஸ்தானில் அரசு அதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தலிபான் அரசு தடை

ஆப்கானிஸ்தானில் அரசு அதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தலிபான் அரசு தடை

ஆப்கானிஸ்தானில் அரசு அதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தலிபான் அரசு தடை

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றும் அனைத்து சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதற்கு நாடு தழுவிய ரீதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களின் இராணுவ நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, நீதிபதிகள் உள்ளிட்ட அனைத்து மட்டத்திலான அரசு அதிகாரிகளுக்கும் கடந்த ஜூன் 16ஆம் திகதி முதல் இந்தத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறி ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் சாதனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவை பொதுவெளியில் அழிக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையால் அரசு அலுவலகங்களின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தகவல் பரிமாற்றம், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சேவைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தடைக்குள்ளாகியதால் நிர்வாகச் செயல்பாடுகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்ஷீர் மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, மனித உரிமை ஆர்வலர்கள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கல்வி, தகவல் பரிமாற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை பதிவு செய்வதற்கான முக்கிய கருவியாக ஸ்மார்ட்போன்கள் இருந்து வரும் நிலையில், இந்தத் தடை மக்களின் தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமையும் என மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"