BREAKING
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

போர் நினைவுத்தூபி சர்ச்சை: வாக்குமூலம் வழங்க சென்ற விமல் வீரவன்ச கைது

போர் நினைவுத்தூபி சர்ச்சை: வாக்குமூலம் வழங்க சென்ற விமல் வீரவன்ச கைது

தேசிய போர் நினைவுத்தூபி வளாகத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக வாக்குமூலம் வழங்க தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தள பதிவின் மூலம், விசேட பொலிஸ் குழுவொன்றினால் தாம் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 18ஆம் தேதி தேசிய போர் வெற்றித் தின ஒத்திகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விமல் வீரவன்ச தலைமையிலான குழுவொன்று நினைவுத்தூபி வளாகத்திற்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸாருக்கும் அந்தக் குழுவினருக்கும் இடையே பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, ஒத்திகை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அதிகாரிகளின் கடமைகளிலும் தலையீடு செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், விமல் வீரவன்ச மற்றும் அவருடன் சென்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் முன்னதாக அறிவித்திருந்தனர்.

நேற்று பொலிஸில் ஆஜராகாத காரணத்தால், இன்று வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"