BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தர (G.C.E. O/L) பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. தற்போது பெறுபேறுகளை வெளியிட தேவையான இறுதி செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பெறுபேறுகள் வெளியாகியதாக பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும் கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.

பரீட்சார்த்திகள் தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வகையில் போலிச் செய்திகள் பரவுவதால், அவற்றை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே நம்புமாறு கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"