BREAKING
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

மகளை துண்டு துண்டாக வெட்டி ரயிலில் வீசிய தந்தை - உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மகளை துண்டு துண்டாக வெட்டி ரயிலில் வீசிய தந்தை - உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மகளை ஆணவக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி தகர பெட்டியில் அடைத்து ரயிலில் வீசிய அதிர்ச்சி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 17ஆம் தேதி கோமதி நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் இருந்த தகரப் பெட்டியில் சிறுமியின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொல்லப்பட்டவர் 15 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணையில், குறித்த சிறுமி மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் ஏற்பட்ட குடும்ப எதிர்ப்பின் காரணமாக அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் இணைந்து இந்த கொடூரமான கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலைக்குப் பிறகு அடையாளம் தெரியாமல் இருக்க உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி, சில பகுதிகளை தகர பெட்டியிலும் சிலவற்றை பைகளிலும் அடைத்து ரயிலில் வீசியதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் பயணிகள் வாக்குமூலத்தின் அடிப்படையில் தந்தை, சகோதரி மற்றும் மைத்துனர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"