BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

டிக்கோயாவில் நள்ளிரவு கொடூரம் - வர்த்தக நிலையத்தில் வயோதிப தம்பதி படுகொலை

டிக்கோயாவில் நள்ளிரவு கொடூரம் - வர்த்தக நிலையத்தில் வயோதிப தம்பதி படுகொலை

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் வயோதிப தம்பதி இருவர் கொடூரமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நள்ளிரவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், 84 வயதுடைய கணவன் மற்றும் மனைவி இருவரும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில், கணவர் கட்டிலில் பல வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாகவும், மனைவி மாடிப்படிகளருகில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தம்பதிகள் நீண்ட காலமாக குறித்த வர்த்தக நிலையத்தை நடத்தி வந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் கொள்ளை முயற்சி நடந்ததா அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமா என்பது தொடர்பில் காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து சில முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுவட்டார சிசிடிவி காட்சிகளும் பரிசோதனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், படுகொலைக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த சம்பவம் டிக்கோயா மக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்தேகநபர்களை விரைவில் கைது செய்ய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"