BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பாரிஸில் 'பேங்க் ஆஃப் அமெரிக்கா' மீதான வெடிகுண்டு சதி முறியடிப்பு: ஈரானிய உளவு அமைப்பு மீது சந்தேகம்!

பாரிஸில் 'பேங்க் ஆஃப் அமெரிக்கா' மீதான வெடிகுண்டு சதி முறியடிப்பு: ஈரானிய உளவு அமைப்பு மீது சந்தேகம்!

பாரிஸின் 8ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள பேங்க் ஆஃப் அமெரிக்கா அலுவலகத்தின் வாசலில், கடந்த 28.03.2026 அதிகாலை வெடிபொருளைப் பற்றவைக்க முயன்ற சிறுவன் ஒருவனை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கச்சிதமாகக் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (29.03.2026) மேலும் இரண்டு சந்தேக நபர்களைத் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தரணி அலுவலகம் கைது செய்துள்ளது. தப்பியோடிய மற்றொரு நபரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மசகு எண்ணெய் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கைவினை வெடிகுண்டு (Improvised Explosive) இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படவிருந்ததாக உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் தெரிவித்துள்ளார்.


இந்தத் தாக்குதல் முயற்சி வெறும் கிரிமினல் நடவடிக்கை மட்டுமல்லாது, இதன் பின்னணியில் ஈரானின் உளவு அமைப்புகள் மற்றும் அவற்றின் 'ப்ராக்ஸிகள்' (Proxies) எனப்படும் கூலிப்படையினர் இருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் அமெரிக்காவிற்குச் சொந்தமான இடங்களை இலக்கு வைத்து இத்தகைய முயற்சிகள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது பிடிபட்டவர்கள் பணத்திற்காகச் செயல்படும் இடைத்தரகர்கள் மட்டுமே என்றும், இதன் உண்மையான மூளையாகச் செயல்பட்டவர்களைக் கண்டறிய உளவுத்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பிரான்ஸிலுள்ள ஈரான் தூதரகம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"