BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

உலக சந்தை விலை குறைந்தாலும் உடனடி எரிபொருள் விலை குறைப்பு சாத்தியமில்லை என பிரதமர் தெரிவிப்பு

உலக சந்தை விலை குறைந்தாலும் உடனடி எரிபொருள் விலை குறைப்பு சாத்தியமில்லை என பிரதமர் தெரிவிப்பு

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ள போதிலும், இலங்கையில் உடனடியாக எரிபொருள் விலையை குறைக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் விற்பனை செய்யப்படும் எரிபொருள் அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதன் செலவுச் சுமையின் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உண்மையான செலவுக் கணக்கீட்டின்படி ஒரு லீட்டர் எரிபொருளின் விலை 700 ரூபாய்க்கும் அதிகமாக இருக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும், இருப்பினும் அரசாங்கம் வழங்கும் நிவாரணம் காரணமாகவே அதனை சுமார் 400 ரூபாய் விலையில் மக்களுக்கு வழங்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உலக சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, விலை குறைப்புக்கான சாத்தியம் உருவாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே அதன் நன்மையை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பான முடிவுகள் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, இறக்குமதி செலவுகள் மற்றும் அரசாங்கத்தின் நிதி பொறுப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"