BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ட்ரோன் தாக்குதல் அச்சம் துபாய் விமான நிலையத்தில் அனைத்து விமானப் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தம்

ட்ரோன் தாக்குதல் அச்சம் துபாய் விமான நிலையத்தில் அனைத்து விமானப் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தம்

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானப் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த தாக்குதலால் கடுமையான தீப்பரவல் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் தாங்கள் பயணிக்கவிருந்த விமானங்கள் மற்றும் பயண விபரங்கள் குறித்து அறிந்து கொள்ள தொடர்புடைய விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"