BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை சரிவு டொலர் வலுவால் ஏற்பட்ட தாக்கம்

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை சரிவு டொலர் வலுவால் ஏற்பட்ட தாக்கம்

வளைகுடா பகுதியில் நிலவும் போர்ச் சூழ்நிலை மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று (12) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

உலகளாவிய ரீதியில் அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்ததுடன், முதலீட்டாளர்கள் மத்தியில் உருவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தங்கம் விலை குறைவதற்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 5,171.26 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, வெள்ளியின் விலையிலும் குறைவு பதிவாகியுள்ளது. அதன்படி இன்று (12) ஒரு அவுன்ஸ் வெள்ளி 85.35 டொலராக சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட போதிலும், சர்வதேச அளவில் டொலரின் வலுவூட்டல் காரணமாக அதன் தாக்கம் மாறுபட்டதாக உள்ளது.

சர்வதேச சந்தையில் விலை குறைந்திருந்தாலும், டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மற்றும் இறக்குமதி செலவுகள் போன்ற காரணங்களால் இலங்கையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்றே அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"