BREAKING
அரைச்சு வச்ச இறால் மசாலா; வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான ரெசிபி நாடு முழுவதும் பலத்த தென்மேற்கு பருவக் காற்று எச்சரிக்கை: பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுரை பாட்டி கைப்பக்குவத்தில் கிராமத்து கோழி குழம்பு; சுவையான வீட்டுச்சிறப்பு ரெசிபி முகநூல் காதல் பெயரில் பரிசு மோசடி: ரூ.5 இலட்சத்தை இழந்த இலங்கை யுவதி மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசிகள்; ஜோதிடத்தில் கூறப்படும் சிறப்பு ராசிகள் அரைச்சு வச்ச இறால் மசாலா; வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான ரெசிபி நாடு முழுவதும் பலத்த தென்மேற்கு பருவக் காற்று எச்சரிக்கை: பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுரை பாட்டி கைப்பக்குவத்தில் கிராமத்து கோழி குழம்பு; சுவையான வீட்டுச்சிறப்பு ரெசிபி முகநூல் காதல் பெயரில் பரிசு மோசடி: ரூ.5 இலட்சத்தை இழந்த இலங்கை யுவதி மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசிகள்; ஜோதிடத்தில் கூறப்படும் சிறப்பு ராசிகள்

இரண்டு கோடி ரூபாய் இலஞ்சம்: சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற அதிகாரி அதிரடி கைது!

இரண்டு கோடி ரூபாய் இலஞ்சம்: சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற அதிகாரி அதிரடி கைது!
சுகாதார அமைச்சில் 2018-ஆம் ஆண்டு தனியார் கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்த விவகாரத்தில், வாடகைப் பணத்தைக் காசோலைகள் மூலம் தாமதமின்றி வழங்குவதற்காக இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற ஓய்வுபெற்ற பிரதம எழுத்தர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.

சுகாதார அமைச்சின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து அதிகாரிகளால் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட குறித்த சந்தேகநபர், கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வரும் 17-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் 50 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இதே ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"