BREAKING
எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல் எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்

நீர்கொழும்பில் மின்சாரம் தாக்கி வங்கி ஊழியர் உயிரிழப்பு

நீர்கொழும்பில் மின்சாரம் தாக்கி வங்கி ஊழியர் உயிரிழப்பு

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பகுதியில் நேற்று இரவு மின்சாரம் தாக்கியதில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளைஞர் நீர்கொழும்பிலுள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வந்துள்ளார். தொழில் நிமித்தமாக அப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு தங்கியிருந்த வீட்டில் பழுதடைந்த மின்விசிறியைத் திருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கியதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"