BREAKING
எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல் எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்

"உயிரிழந்தது வயதுச் சிறுவனே!" - பொலிஸ் அறிக்கையில் முரண்பாடு: போராட்டங்களைத் தவிர்க்குமாறு பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா?

"உயிரிழந்தது வயதுச் சிறுவனே!" - பொலிஸ் அறிக்கையில் முரண்பாடு: போராட்டங்களைத் தவிர்க்குமாறு பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா?

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் வயது தொடர்பாக பொலிஸ் தரப்பிலிருந்து இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன:


பிப்ரவரி 10: பொலிஸார் வெளியிட்ட முதல் அறிக்கையில் சிறுவனுக்கு 17 வயது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிப்ரவரி 11: திடீரென வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில் சிறுவனின் வயது 19 என மாற்றிக் கூறப்பட்டுள்ளது.

எனினும், குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் ஆதாரங்களின்படி உயிரிழந்தவர் 17 வயதுடைய சிறுவன் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக ஒரு சிறுவன் உயிரிழப்பதற்கும், இளைஞன் உயிரிழப்பதற்கும் இடையிலான பாரதூரமான வித்தியாசத்தைக் கருத்தில் கொண்டே இந்த வயது மாற்றம் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

2. போராட்டங்களைத் தவிர்க்க அழுத்தம்:
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திலிருந்து பேசுவதாகக் கூறி ஒருவர் தொலைபேசி மூலம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது:


மகனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டங்களையோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளையோ முன்னெடுக்க வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது.

"வழக்கு விசாரணையில் உள்ளது, நாங்களே ஒரு திகதியைத் தீர்மானித்து நீதவானைச் சந்திக்க ஏற்பாடு செய்வோம், அப்போது உங்கள் தரப்பு நியாயத்தைக் கூறலாம்" என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் எவரேனும் வந்தால் அவர்களைச் சந்திக்கவோ அல்லது பேசவோ வேண்டாம் என்றும், அவர்கள் அரசியலுக்காகக் காரியங்களைக் குழப்புவார்கள் என்றும் அந்த நபர் எச்சரித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"