BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

"மீண்டும் ஒரு மழைக் காலம்!" - வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: -ஆம் திகதி வரை பல மாகாணங்களுக்குப் பாதிப்பு; விவசாயிகளுக்கு அவசர அறிவுறுத்தல்.

"மீண்டும் ஒரு மழைக் காலம்!" - வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: -ஆம் திகதி வரை பல மாகாணங்களுக்குப் பாதிப்பு; விவசாயிகளுக்கு அவசர அறிவுறுத்தல்.

இன்று இரவு (11.02.2026) வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாளை முதல் மழை வீழ்ச்சி அதிகரிக்கவுள்ளது.


முக்கிய தினங்கள் மற்றும் பாதிக்கப்படும் பகுதிகள்:

பெப்ரவரி 12 - 14: வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேல், வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.

நாளை இரவு (பிப் 12): யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளுக்குக் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மறுதினம் (பிப் 13): கிழக்கு, மத்திய, மேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்தடுத்த வானிலை மாற்றங்கள்:

பெப்ரவரி 16 - 19: மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும்.

பெப்ரவரி இறுதி & மார்ச் ஆரம்பம்: 'மேடன் ஜுலியன் அலைவு' (MJO) வங்காள விரிகுடாவுக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுவதால், பெப்ரவரி இறுதி மற்றும் மார்ச் தொடக்கத்தில் மீண்டும் ஒரு சுற்று பலத்த மழை பெய்யக்கூடும் (இது பின்னர் உறுதிப்படுத்தப்படும்).

விவசாயிகளுக்கான அறிவுறுத்தல்:
தற்போது அறுவடை காலமாகும் என்பதால், இந்த மழைக்கால நிலவரங்களைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்களது அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய சேமிப்பு நடவடிக்கைகளை திட்டமிடுமாறு பேராசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"