BREAKING
பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர் எண்ணெயும் டொலரும்: எரிபொருள் கணக்கில் ஏற்படும் ஒரு அதிர்ச்சி அமெரிக்க டொலரின் மேலாதிக்கத்தை எவ்வாறு வலுப்படுத்தக்கூடும் யாழில் கணவனைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை 11 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கடூழிய சிறை WhatsApp பயனர்களுக்கு புதிய வசதி ; இனி குறுஞ்செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பலாம் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர் எண்ணெயும் டொலரும்: எரிபொருள் கணக்கில் ஏற்படும் ஒரு அதிர்ச்சி அமெரிக்க டொலரின் மேலாதிக்கத்தை எவ்வாறு வலுப்படுத்தக்கூடும் யாழில் கணவனைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை 11 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கடூழிய சிறை WhatsApp பயனர்களுக்கு புதிய வசதி ; இனி குறுஞ்செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பலாம்

யாழில் கணவனைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை

யாழில் கணவனைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், உயிரிழந்தவரின் மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (25) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி, அரியாலை - பூம்புகார் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய செல்வகுமார் என்பவர் தேங்காய்த் துருவியால் தலையில் அடிக்கப்பட்டுப் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் மனைவிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், பிரதிவாதிக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்தரன், எதிராளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"