BREAKING
எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள் கேன்களுடன் முண்டியடித்த மக்கள் கூட்டம் யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; 21 மாணவர்கள் கைது யாழில் விசேட அதிரடிப்படையினரால் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரிடம் வழிப்பறி; பொலிஸார் தீவிர விசாரணை நாசா விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கையின் புகைப்படம்; சமூகவலைத்தளங்களில் வைரல் எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள் கேன்களுடன் முண்டியடித்த மக்கள் கூட்டம் யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; 21 மாணவர்கள் கைது யாழில் விசேட அதிரடிப்படையினரால் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரிடம் வழிப்பறி; பொலிஸார் தீவிர விசாரணை நாசா விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கையின் புகைப்படம்; சமூகவலைத்தளங்களில் வைரல்

நாசா விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கையின் புகைப்படம்; சமூகவலைத்தளங்களில் வைரல்

நாசா விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கையின் புகைப்படம்; சமூகவலைத்தளங்களில் வைரல்

  நாசா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கையின் கண்கவர் தோற்றத்தைப் படம்பிடித்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், அந்தப் புகைப்படத்தைத் தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படம் இலங்கை சமூக வலைத்தளப் பயனர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

சுமார் 400 கிலோமீற்றர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் புகைப்படத்தில், இந்தியப் பெருங்கடலின் நீல நிறக் கடற்பரப்பால் சூழப்பட்ட இலங்கையும், தென்னிந்தியாவின் தென்பகுதியும் தென்படுகின்றன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளிப் படையின் கேணலும், அவசரகால மருத்துவ நிபுணருமான அனில் மேனன், 2026 ஜூலை மாதம் Soyuz MS-29 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தார்.

எட்டு மாத கால விண்வெளிப் பயணத்தில் பங்கேற்றுள்ள அவர், 74 மற்றும் 75ஆவது விண்வெளிப் பயணக் குழுக்களின் வானூர்தி பொறியியலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்தப் பயணத்தின்போது உயிரியல் மருத்துவ ஆய்வுகள், விண்வெளி மருத்துவம் மற்றும் விண்வெளி நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட ஆய்வுகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

மேலும், விண்வெளி நிலையத்தின் கண்காணிப்புப் பகுதியிலிருந்து பூமியின் பல்வேறு இயற்கைக் காட்சிகளைப் படம்பிடித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்து வருகின்றார்

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"