கிரிஸ் வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை தற்காலிகமாக இடைநிறுத்தி, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
நாமல் ராஜபக்சவுக்கு கடந்த நவம்பர் 3ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.
இதனை எதிர்த்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்தது.
பிணை வழங்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என்றும், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும் ஆணைக்குழு வாதிட்டது.
இதனையடுத்து, இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை உத்தரவைத் தற்காலிகமாக இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக