பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று அழைக்கப்பட்டனர்.
அதன்படி, விசாரணைகளின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் புனித நகரிலுள்ள ருவன்வெலிசாய அருகே, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் மற்றும் குழுவினர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த இடத்திற்கு இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் வருகை தந்த போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.
இந்த மோதலில் தலையில் காயமடைந்த இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னதாகத் தலையிட்ட பொலிஸார், பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உட்பட பலரைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், இன்று இராஜாங்கனை சத்தாரத்ன தேரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக