நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அறிவித்தலை பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் விடுத்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றின் மூலம் நீதிமன்ற அவமதிப்பு இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுக் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இவ் முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக