BREAKING
தமிழக அரசியலில் பரபரப்பு ; ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்வதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட விமல் வீரவங்ச கந்த சஷ்டி விரத நாளில் பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய மயில் தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள் கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள் தமிழக அரசியலில் பரபரப்பு ; ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்வதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட விமல் வீரவங்ச கந்த சஷ்டி விரத நாளில் பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய மயில் தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள் கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள்

வருட கட்டாய கல்வி பெற்றோரின் முக்கிய பொறுப்பு ; பிரதமர் ஹரிணி வலியுறுத்து

வருட கட்டாய கல்வி பெற்றோரின் முக்கிய பொறுப்பு ; பிரதமர் ஹரிணி வலியுறுத்து

அக்கரைப்பற்று முஸ்லிம் தேசியப் பாடசாலையின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (15) நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

குறிப்பாக சாதாரண மற்றும் உயர்தர வகுப்புகளுக்கு வரும்போது மாணவர்கள் பாடசாலைக்கு வருவதை நிறுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், உயர் வகுப்புகளிலுள்ள பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதற்குப் பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியைப் பெறுவதற்கான உரிமை உள்ளதெனத் தெரிவித்த பிரதமர், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக வரலாற்றில் அதிகூடிய தொகையாக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதில் 562.4 பில்லியன் ரூபாய் பாடசாலைக் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கல்வி மறுசீரமைப்புகளின் கீழ் 2026ஆம் ஆண்டில் முதலாம் தரத்துக்கும், 2027ஆம் ஆண்டில் இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், மாணவர்கள் புதிய பாடங்களைக் கற்பதற்கும், தொழில்நுட்பத்தை அணுகுவதற்கும், தொழிற்கல்விக் கல்வியைப் பாடசாலைகளிலேயே பெறுவதற்குமான சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பரீட்சைகளில் சித்தியடைவதுடன் நல்ல வாழ்க்கைத் திறன்கள், மனப்பாங்குகள் மற்றும் சமூகத்துடன் இணைந்து செயற்படும் திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியமென்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், அகில இலங்கைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலையின் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடமும் பிரதமரால் பார்வையிடப்பட்டது.

இந்தநிகழ்வில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர், கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"