BREAKING
இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை! யாழில் இரண்டு இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல் ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் லாஃப்ஸ் விவகாரம்; சபையில் பெரும் சலசலப்பு அரசியலை விட்டு புதிய பாதையில் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர! லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம் இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை! யாழில் இரண்டு இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல் ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் லாஃப்ஸ் விவகாரம்; சபையில் பெரும் சலசலப்பு அரசியலை விட்டு புதிய பாதையில் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர! லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம்

இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; ஆண்டுகள் சிறை!

இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; ஆண்டுகள் சிறை!

  இங்கிலாந்தில் சமூக வலைதளங்கள் மூலம் சிறார்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 27 வயது இந்திய மாணவர் பிலால் காஜிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சிறுவர்கள் பயன்படுத்தும் கேமிங் மற்றும் சமூக ஊடத் தளங்களில் தன்னை ஒரு டீன் ஏஜ் சிறுவனாக உருமாற்றி கொண்டு, 10 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளை   குறிவைத்து அந்தரங்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று, பின்னர் அவற்றைக் காட்டி மிரட்டித் தொடர்ந்து பிளாக்மெயில் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் பிலால் காஜிக்கு இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

இங்கிலாந்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், இவர் சுமார் 180 பேரை தொடர்பு கொண்டுள்ளதும், 28 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

காஜியின் இந்த செயலால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கடுமையான மன உளைச்சலுக்கும் நீண்டகால பாதிப்புக்கும் ஆளாகியுள்ளனர். திரை மறைவில் இருந்து கொண்டு குற்றங்களில் ஈடுபட்டால் தப்பிக்க முடியாது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இணைய பாதுகாப்பு மற்றும் குழந்தைகளை பாதுகாக்க இதுபோன்ற குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"