BREAKING
இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை! யாழில் இரண்டு இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல் ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் லாஃப்ஸ் விவகாரம்; சபையில் பெரும் சலசலப்பு அரசியலை விட்டு புதிய பாதையில் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர! லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம் இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை! யாழில் இரண்டு இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல் ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் லாஃப்ஸ் விவகாரம்; சபையில் பெரும் சலசலப்பு அரசியலை விட்டு புதிய பாதையில் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர! லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம்

அனோஜனின் தண்டனை ரத்து; ஜனாதிபதிக்கு கண்ணீருடன் நன்றி கூறிய குடும்பத்தினர்

அனோஜனின் தண்டனை ரத்து; ஜனாதிபதிக்கு கண்ணீருடன் நன்றி கூறிய குடும்பத்தினர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்குத் தலையிட்டமைக்காக, அவரது குடும்பத்தினர் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துத்  நன்றிகளைத் தெரிவித்தனர்.

இதன்போது அவர்களுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இலங்கை மக்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிற்பது தனது பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டார்.

னோஜன் சிவராசாவை விடுவிப்பதற்காகச் சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இன, மத, கட்சி, நிற பேதமின்றி இதற்காகத் தலையிட்ட அனைவருக்கும் விசேட நன்றிகள் உரித்தாக வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அனோஜன் சிவராசா தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரது பெற்றோர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

தமது மகனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றி சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்காக ஆரம்பம் முதலே தலையிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புமற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சவூதி அரேபியாவுக்குச் சென்று சட்ட ரீதியான தலையீடுகளை மேற்கொண்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட சகல இலங்கையர்களுக்கும் அனோஜன் சிவராசாவின் தாயார்  தமது  கண்ணீருடன்  நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"