BREAKING
இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை! யாழில் இரண்டு இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல் ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் லாஃப்ஸ் விவகாரம்; சபையில் பெரும் சலசலப்பு அரசியலை விட்டு புதிய பாதையில் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர! லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம் இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை! யாழில் இரண்டு இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல் ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் லாஃப்ஸ் விவகாரம்; சபையில் பெரும் சலசலப்பு அரசியலை விட்டு புதிய பாதையில் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர! லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம்

விரிவுரையாளர் மஹிந்த பத்திரன பகிரங்க மன்னிப்பு கோரல்

விரிவுரையாளர் மஹிந்த பத்திரன பகிரங்க மன்னிப்பு கோரல்

முக நூலில் நீதிமன்றை அவமதிப்பு செய்த குற்றச்சாட்டுக்கு விரிவுரையாளர் மஹிந்த பத்திரன நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவுள்ளதாக அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றை அவமதிப்பு செய்ததாகக் கூறி கோட்டை நீதவான் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள பதிவைத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டமை தொடர்பில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர தயாராக இருப்பதாக, அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி வி. கே. சொக்ஸி நேற்று (11) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

குறித்த பதிவை இட்டதன் மூலம் தனது கட்சிக்காரருக்கு நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் இருக்கவில்லை என்பதால், அது தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய சத்தியக்கடதாசி ஒன்றைச் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் கோட்டை நீதவான் அனுப்பி வைத்த முறைப்பாட்டிற்கு அமைவான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"