BREAKING
இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை! யாழில் இரண்டு இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல் ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் லாஃப்ஸ் விவகாரம்; சபையில் பெரும் சலசலப்பு அரசியலை விட்டு புதிய பாதையில் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர! லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம் இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை! யாழில் இரண்டு இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல் ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் லாஃப்ஸ் விவகாரம்; சபையில் பெரும் சலசலப்பு அரசியலை விட்டு புதிய பாதையில் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர! லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம்

யோஷித ராஜபக்ச முதுகுவலியால் பிற்போடப்பட்ட வழக்கு!

யோஷித ராஜபக்ச முதுகுவலியால் பிற்போடப்பட்ட வழக்கு!

யோஷித ராஜபக்ச முதுகுவலியால்  நீதிமன்றம் வராத காரணத்தால்  அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12.11.2026) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட து.

வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை இன்று பிற்பகல்  நடைபெறவிருந்த போதிலும், காலை வழக்கு அழைக்கப்பட்டபோது பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரர் முதுகு வலி தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இன்று முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சி விசாரணையை நிறைவு செய்ய எதிர்பார்த்திருந்ததாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளர் தரப்பில் மேலும் மூன்று சாட்சிகளை மாத்திரமே அழைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் வழக்குத் திகதியில் குறித்த மூன்று சாட்சிகளையும் நீதிமன்றத்திற்கு அழைக்க எதிர்பார்ப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் அறிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க, வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்துவதற்குத் திகதி குறித்துள்ளார்.

அத்துடன், அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும்  நீதிபதி உத்ரவிட்டார்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"