வவுனியா மாநகரசபை ஊழியர் மீது பெண் ஒருவர் தாக்குதல் வடந்த்திய நிலையில் பகாயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த மரக்கறி மற்றும் பழங்களை அகற்றும் பணியில் வவுனியா மாநகரசபை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, குறித்த வியாபார நிலையத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் , ஊழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது தாக்குதலுக்கு இலக்கான மாநகரசபை ஊழியர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பெண்ணை பொலிஸார் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளைப் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக