வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில், 12 பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த 40 வயதுடைய பெண் ஒருவர் ரகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை ஊடகப் பிரிவின் தகவல்படி, கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், புதன்கிழமை (04) இரவு ரகம காவல்துறையினர் கின்கெண்டா (Ginkenda) பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
இவர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாகவும், இதன்காரணமாக வெலிசர நீதவான் நீதிமன்றம் இவருக்கு எதிராக 12 பிடிவாரண்டுகளைப் பிறப்பித்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் இன்று (05) வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். இது குறித்து ரகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக