BREAKING
எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல் எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்

சிக்கன் சாப்பிட்டால் சிக்குன்குனியா வருமா? உண்மையை விளக்கும் மருத்துவ நிபுணர்

சிக்கன் சாப்பிட்டால் சிக்குன்குனியா வருமா? உண்மையை விளக்கும் மருத்துவ நிபுணர்

சமீப காலமாக சிக்குன்குனியா பரவல் அதிகரித்து வருவதால், பலர் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர்.

இன்னும் சிலர், சிக்கன் சாப்பிட்டால்தான் சிக்குன்குனியா பரவும் என்ற தவறான நம்பிக்கையிலும் உள்ளனர்.

ஆனால் இதில் உண்மை எவ்வளவு உள்ளது?

இதுகுறித்து மருத்துவ நிபுணர் டாக்டர் பிரகாஷ் மூர்த்தி தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்.

டாக்டர் பிரகாஷ் மூர்த்தி கூறுகையில்,

சிக்கன் சாப்பிடுவதற்கும் சிக்குன்குனியா நோய்க்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

“சிக்குன்குனியா” என்ற சொல்லுக்கு, கிமோகோண்டே மொழியில் “குன்குன்யாலா” என்றால்

“வளைந்து போகும் அளவிற்கு கடும் வலி” என்பதே அர்த்தம்.

இந்த பெயரே நோயின் தன்மையிலிருந்து வந்ததே தவிர, சிக்கன் உணவுடன் சம்பந்தமே இல்லை.

சிக்குன்குனியா முதன்முதலில் 1952 ஆம் ஆண்டு டான்சானியா நாட்டில் கண்டறியப்பட்டது

இந்த நோய் ஏடிஸ் (Aedes) வகை கொசுக்களால் பரவுகிறது

டெங்கு காய்ச்சலை பரப்பும் அதே கொசுக்கள்தான் சிக்குன்குனியாவையும் பரப்புகின்றன

இக்கொசுக்கள் கருப்பு–வெள்ளை கோடுகளுடன் காணப்படுவதால் “புலி கொசு” என்றும் அழைக்கப்படுகின்றன

 எனவே, டெங்கு பரவும் பகுதிகளில் சிக்குன்குனியாவும் பரவும் வாய்ப்பு அதிகம்

இந்த வைரஸ் தாக்குவதால்,

கடுமையான மூட்டு வலி

முதுகு வலி

தசை மற்றும் மூட்டு சவ்வுகளில் வீக்கம்

நீண்ட நாட்கள் வலி நீடிக்கும் நிலை

என்பவை ஏற்படலாம்.

 சிக்கன் சாப்பிடுவதால் சிக்குன்குனியா வராது
 கொசு கட்டுப்பாடே முக்கிய பாதுகாப்பு
 நீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
 முழு கை, முழு கால உடைகள் அணிவது நல்லது
 காய்ச்சல், மூட்டு வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்

சிக்குன்குனியா என்பது உணவால் வரும் நோய் அல்ல,

கொசு மூலம் பரவும் வைரஸ் நோய் என்பதைக் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"