BREAKING
ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எம். எம்.12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் சனிக்கிழமை கந்தானேகெதர, வலகும்புரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வீட்டிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, வலகும்புரமுல்ல, குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் எவ்வாறு அவரிடம் கிடைத்தன என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"