BREAKING
ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல்

லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தரை தேடும் பொலிஸார் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தரை தேடும் பொலிஸார் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட 46 வயதுடைய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மேற்கு லண்டனில் பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாலசங்கர் நாராயணன் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு லண்டனின் சவுத்போல் (Southall) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து அவர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் தற்போது கிழக்கு, மத்திய அல்லது மேற்கு லண்டன் பகுதிகளில் நடமாடக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொதுமக்கள் அவரை நேரடியாக அணுகவோ அல்லது தடுத்து நிறுத்த முயற்சிக்கவோ வேண்டாம் எனவும், அவரைக் காணும் பட்சத்தில் உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பாலசங்கர் நாராயணன் இதற்கு முன்னரும் பலமுறை பராமரிப்பாளர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2021 – ஒருமுறை தப்பிச் சென்றுள்ளார்.

2023 – இரண்டு முறை தப்பிச் சென்றுள்ளார்.

2024 – மீண்டும் ஒருமுறை தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர் என பொலிஸார் எச்சரித்துள்ளதுடன், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"