BREAKING
ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் சாப்பிட விஜய் கூப்பிட்டும் நான் போகல..கேம் ஆடிய சிலர்!! உதயநிதி சொன்ன ரகசியம்.. ரூ. 100 கோடி வசூலை தாண்டிய DC படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் சாப்பிட விஜய் கூப்பிட்டும் நான் போகல..கேம் ஆடிய சிலர்!! உதயநிதி சொன்ன ரகசியம்.. ரூ. 100 கோடி வசூலை தாண்டிய DC படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை

மருந்துகளுடன் சென்ற நோயாளர் காவு வண்டி விபத்து ; சாரதி சம்பவ இடத்திலேயே பலி

மருந்துகளுடன் சென்ற நோயாளர் காவு வண்டி விபத்து ; சாரதி சம்பவ இடத்திலேயே பலி

இந்த விபத்து, இன்று (10.09.2026) பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், பாதெனிய – அனுராதபுரம் வீதியில் உள்ள கத்தபஹுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருட்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டியே இவ்வாறு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் தாக்கம் காரணமாக நோயாளர் காவு வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், நோயாளர் காவு வண்டியில் பயணித்த நால்வரும், லொறியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அம்பன்பொல மற்றும் கல்கமுவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"