BREAKING
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு ; பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமும் நிறைவு நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை ரத்து ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் ; புதிய அம்சங்கள் இதோ இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல உதவிய படகு ஓட்டுநர் விளக்கமறியலில் அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு ; பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமும் நிறைவு நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை ரத்து ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் ; புதிய அம்சங்கள் இதோ இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல உதவிய படகு ஓட்டுநர் விளக்கமறியலில் அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்

மாற்றுத்திறனாளிகளுக்காக இயந்திரங்களில் புதிய வசதி

மாற்றுத்திறனாளிகளுக்காக இயந்திரங்களில் புதிய வசதி
பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதியை உறுதி செய்யும் வகையில், நாட்டிலுள்ள அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளைப் பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள், பிறரின் உதவியை நாடாமல் தங்களது வங்கிச் சேவைகளை சுயமாகவும் இலகுவாகவும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான நிதிச் சேவைகளை மேலும் அணுகக்கூடியதாகவும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"