BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பஸ் லலித் - பலத்த பாதுகாப்பில் க்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்

சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பஸ் லலித் - பலத்த பாதுகாப்பில் க்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் 36 வயதுடைய லலித் கன்னங்கர, மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் இன்று (25) அதிகாலை டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 226 மூலம் அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் பல மணிநேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.

சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் (Red Notice) கீழ் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசாரணைகளுக்குப் பின்னர் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபருக்கு எதிராக மனிதக்கொலை, பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கொன்றுடன் தொடர்புடையதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு எதிராக திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ‘பஸ் லலித்’ தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"