BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புதனின் இரட்டை பெயர்ச்சி.. செப்டம்பரில் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

புதனின் இரட்டை பெயர்ச்சி.. செப்டம்பரில் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

2026 செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் புதன் பகவான் இரண்டு முறை ராசி மாறுகிறார். இதன் காரணமாக சில ராசியினரின் தொழில், பணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

புதன் பகவான் அறிவு, ஞானம், கணிதம், பேச்சுத்திறன் மற்றும் வணிகம் ஆகியவற்றின் காரகனாக கருதப்படுகிறார். தற்போது சிம்ம ராசியில் இருக்கும் புதன், செப்டம்பர் 7ஆம் தேதி கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

கன்னி ராசியில் சுமார் 20 நாட்கள் சஞ்சரிக்கும் புதன், பின்னர் செப்டம்பர் 26ஆம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த இரட்டை பெயர்ச்சி சில ராசியினருக்கு சாதகமான பலன்களை வழங்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மேஷ ராசியினருக்கு செப்டம்பர் மாத புதன் பெயர்ச்சி பல்வேறு வகைகளில் சாதகமான மாற்றங்களை கொண்டு வரலாம்.

தொழில் மற்றும் பணம் தொடர்பான விஷயங்களில் தெளிவான முடிவுகளை எடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மனதில் நேர்மறையான எண்ணங்கள் அதிகரிப்பதுடன், எதிர்பார்த்த சில வாய்ப்புகளும் கிடைக்கலாம்.

துலாம் ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சி நல்ல பலன்களை வழங்கக்கூடும்.

உங்களின் பேச்சுத்திறன் மற்றும் தகவல் தொடர்புத் திறன் மேம்படும். சிக்கலான விஷயங்களையும் எளிதாக கையாளும் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகலாம்.

மேலும், வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன.

மகர ராசியினருக்கு செப்டம்பர் மாத புதன் பெயர்ச்சி தொழில் மற்றும் வருமானத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரலாம்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சில சாதகமான செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம்.

ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஜோதிடத்தில் கணிக்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"