BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வயதில் கல்லூரி பேராசிரியரான அமெரிக்க இளைஞர்; கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தல்

வயதில் கல்லூரி பேராசிரியரான அமெரிக்க இளைஞர்; கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தல்

18 வயதிலேயே கல்லூரி பேராசிரியராகி அமெரிக்க இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நேத்தன் தாமஸ், உலகின் மிக இளம் வயது ஆண் பேராசிரியர் என்ற கின்னஸ் உலக சாதனை பட்டத்தை பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக, 1717ஆம் ஆண்டு தனது 19 வயதில் பேராசிரியராக பணியில் சேர்ந்த ஸ்காட்லாந்து கணிதவியலாளர் காலின் மெக்லாரின் பெயரில் இந்த சாதனை இருந்தது. சுமார் 306 ஆண்டுகளாக நீடித்த அந்த சாதனையை நேத்தன் தாமஸ் முறியடித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 18 வயதில் மியாமி டேட் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்ததன் மூலம் நேத்தன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

மேலும், 2008ஆம் ஆண்டு தனது 18 வயதில் உலகின் இளம் பெண் பேராசிரியராக சாதனை படைத்த ஆலியா சபூரை விட நேத்தன் 16 நாட்கள் இளையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேத்தன் தனது கல்விப் பயணத்தையும் மிக இளம் வயதிலேயே தொடங்கியுள்ளார். தனது 10 வயதில் மியாமி டேட் கல்லூரியில் பள்ளிப் படிப்புடன் இணைந்து கல்லூரிப் படிப்பையும் ஆரம்பித்துள்ளார்.

பின்னர் 14 வயதில் புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர், மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை தனது 18 வயதிற்குள் நிறைவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் மாதம் மியாமி டேட் கல்லூரியில் பொறியியல் மாணவர்களுக்கு சி-பிரோகிராமிங் பாடத்தை கற்பிக்கும் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.

அவர் வகுப்பெடுத்த மாணவர்களில் பலர் அவரது வயதுக்கு சமமானவர்களாகவோ அல்லது அவரைவிட வயதில் மூத்தவர்களாகவோ இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதிலேயே கல்வியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள நேத்தன் தாமஸின் இந்த கின்னஸ் உலக சாதனை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"