BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சுரேஷ் சலே தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவு இரகசிய நடவடிக்கை முன்னெடுத்ததாக தகவல்

சுரேஷ் சலே தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவு இரகசிய நடவடிக்கை முன்னெடுத்ததாக தகவல்

சுரேஷ் சலேவை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவால் மிகவும் இரகசியமான நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான தகவல்களை லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதில், இராணுவ புலனாய்வு பிரிவின் உயர் பாதுகாப்பு வளாகத்திற்குள் “ஒமேகா அறை” என அழைக்கப்படும் விசேட பிரிவு ஒன்று இயங்கிவருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரிவிற்குள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் நடவடிக்கைகள் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரிவில் அதிவேக தகவல் தொடர்பு வசதிகள், சிக்னல் புலனாய்வு மற்றும் சைபர் நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப அமைப்புகள் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு எல்லைப் பாதுகாப்பு அல்லது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அல்லாமல் உள்நாட்டு இலக்குகளை குறிவைத்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உண்மை தகவல்களை மறைத்தல், போலித் தகவல்களை பரப்புதல் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்து உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் இதன் செயற்பாடுகளில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர் தர விபிஎன் வலைப்பின்னல்கள் மற்றும் வெளிநாட்டு சேவையகங்கள் ஊடாக டிஜிட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அடையாளம் காண முடியாத மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் போலி சமூக ஊடகக் கணக்குகள் உருவாக்கப்படுவதாகவும் அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிராபிக்ஸ், மீம்கள் மற்றும் பிரச்சாரப் பதிவுகள் தயாரிக்கப்படுவதாகவும், அவை குறிப்பிட்ட நபர்களின் நம்பகத்தன்மையை பாதிக்கும் நோக்கத்துடன் பரப்பப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் சட்டமா அதிபர் பாலிந்த ரணசிங்க ஆகியோர் இந்த நடவடிக்கைகளின் முக்கிய இலக்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சுரேஷ் சலேவுக்கு ஆதரவான பிரச்சாரங்களும் இதே வலையமைப்பின் மூலம் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படுவதாகவும், அவரது பொதுப் பிம்பத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"