BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு லட்சத்தை கடந்துள்ளது

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு லட்சத்தை கடந்துள்ளது

இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. 2026 ஜனவரி 01 முதல் மே 31 வரை காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,022,022 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த காலப்பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து 250,260 பேர் வருகை தந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து 98,093 பேரும், ரஷ்யாவிலிருந்து 76,073 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

மே மாதம் மட்டும் 145,745 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

மே மாதத்தில் அதிகளவில் வருகை தந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பிரித்தானியா, சீனா, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முக்கிய இடங்களை பெற்றுள்ளன.

இந்த வளர்ச்சி இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா துறைக்கு நேர்மறையான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"