BREAKING
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

நகைகளை அடகு வைக்க உள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நகைகளை அடகு வைக்க உள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டின் நிதி துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைக்கவும் இலங்கை மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதன்படி, தங்கக் கடன்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் மதிப்பு விகிதம் (Loan-to-Value Ratio) 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகள், சிறப்பு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த விதியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய தங்கக் கடன்களுக்கும், ஏற்கனவே உள்ள கடன்களின் புதுப்பிப்புகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்.

தங்கத்தின் மதிப்பீடு அதன் தற்போதைய சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு நியாயமான முறையில் செய்யப்பட வேண்டும் என்றும், கடன் வழங்கும் போது சரியான மதிப்பீட்டு முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை வங்கித்துறையில் அபாயங்களை குறைத்து, நிதி நிலைத்தன்மையை உறுதி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"