BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் () கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: பொறுப்பதிகாரிக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் () கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: பொறுப்பதிகாரிக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை!

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி என்பவருக்கு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அலுவலகத்திற்குள் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் பாதுகாப்பில் உள்ள ஒரு கைதிக்கு இவ்வாறான சலுகைகள் வழங்கப்பட்டமை பொலிஸ் ஒழுக்கவிதிகளுக்கு முரணானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) நேரடியாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.


இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் மூலம் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, இந்தச் சட்டவிரோதச் செயலுக்கு அனுமதி அளித்த அல்லது உடந்தையாக இருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. "பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகளாவர்; அவர்கள் குற்றவாளிகளுடன் எவ்விதமான தனிப்பட்ட தொடர்புகளையும் பேண முடியாது" என அவர் இதன்போது கடுமையாக எச்சரித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"