BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் இணைய மோசடிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் இணைய மோசடிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு Sri Lanka Computer Emergency Readiness Team எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் Charuka Damunupola வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரின் தகவலின்படி, பண்டிகைக் காலங்களில் விசேட சலுகைகள் அல்லது பணப்பரிசுகள் வழங்கப்படுகின்றன என்ற பெயரில் சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்களும் சந்தேகத்திற்குரிய லிங்குகளும் பரப்பப்படுகின்றன.

இவ்வாறான லிங்குகளை கிளிக் செய்தால், அவை பொதுமக்களை போலி இணையத்தளங்களுக்கு அழைத்துச் செல்லும் அபாயம் உள்ளதாகவும், அங்கு தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விபரங்கள் திருடப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “போயா தின டேட்டா தானம்” போன்ற பெயர்களில் பொதுமக்களின் தகவல்களை சேகரிக்கும் இணைய மோசடிகளும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அறிமுகமில்லாத நபர்களிடமிருந்தோ அல்லது சந்தேகத்திற்குரிய விளம்பரங்களிலிருந்தோ வரும் லிங்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து அறிய விரும்பினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களை நேரடியாக அணுக வேண்டும் என்றும், கடவுச்சொற்கள் அல்லது வங்கி அட்டை விபரங்களை இணையத்தில் பகிரும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"