BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நீதிமன்ற விசாரணைகள் நிறைவு: பாரியளவிலான போதைப்பொருள் கையிருப்பு இன்று தீயிட்டு அழிப்பு!

நீதிமன்ற விசாரணைகள் நிறைவு: பாரியளவிலான போதைப்பொருள் கையிருப்பு இன்று தீயிட்டு அழிப்பு!
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பல்வேறு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பெருமளவிலான போதைப்பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று (13.03.2026) காலை முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்படி, 40 கிலோகிராம் 533 கிராம் ஹெரோயின், 132 கிலோகிராம் 79 கிராம் கஞ்சா, 55 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,482 போதை மாத்திரைகள் இவ்வாறு தீயிட்டு அழிக்கப்படவுள்ளன.

 போதைப்பொருள் கையிருப்பு இன்று அதிகாலை 6.00 மணியளவில் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புத்தளம், வன்னதவில்லுவ - லெப்டோவத்த பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நிறுவப்பட்டுள்ள நவீன தகன உலை மூலம் இன்று காலை 9.00 மணியளவில் இவை அனைத்தும் முழுமையாக அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"