BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நெல்லியடியில் மாமியார் வாள் வெட்டில் உயிரிழப்பு மருமகன் அதிரடியாக கைது

நெல்லியடியில் மாமியார் வாள் வெட்டில் உயிரிழப்பு மருமகன் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் மருமகன் மேற்கொண்ட வாள் தாக்குதலில் மாமியார் உயிரிழந்துள்ளதுடன், மாமனார் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (11) வடமராட்சி பருத்தித்துறை கிராமகோடு பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியின் தந்தையை வாளால் தாக்கி கடுமையாக காயப்படுத்தியதுடன், மனைவியின் தாயாரையும் வாளால் தாக்கி படுகொலை செய்துள்ளார்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தையடுத்து பருத்தித்துறை பொலிஸார் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு சந்தேக நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வாள் வெட்டு சம்பவத்திற்குப் பின்னர் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பு அதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.

இதன் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"