BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஈராக் கடல் பகுதியில் வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு

ஈராக் கடல் பகுதியில் வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு

ஈராக் கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் பாரிய தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி விநியோகத்தை பாதிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன. தாக்குதலுக்கு இலக்கான இரண்டு கப்பல்களும் தற்போது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து கப்பல்களில் இருந்த 25 தொழிலாளர்களை அதிகாரிகள் அவசரமாக வெளியேற்றியுள்ளனர். இருப்பினும் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த தாக்குதலில் வெடிபொருட்கள் ஏற்றிச் சென்ற ஈரானின் சிறிய படகுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"