BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சங்கீதாவுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் நடத்தும் தனிமனித தாக்குதல்: எழுத்தாளர் தனுஜா கடும் கண்டனம்!

சங்கீதாவுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் நடத்தும் தனிமனித தாக்குதல்: எழுத்தாளர் தனுஜா கடும் கண்டனம்!
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரது விவாகரத்து விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், சங்கீதா மீது நடத்தப்படும் தனிமனித தாக்குதல்களுக்கு ஜெர்மனியில் வசிக்கும் புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர் தனுஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சங்கீதாவை 'அகதி' என்றும், ஒரு பெண் என்ற ரீதியிலும் விஜய் ரசிகர்கள் மிகவும் தரக்குறைவாக விமர்சிப்பது நாகரீகமற்ற செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "கடந்த 28 ஆண்டுகளாக விஜய்யின் நிழலாக இருந்த சங்கீதாவை இன்று விமர்சிப்பது, மறைமுகமாக விஜய்யையே அவமதிப்பதற்கு சமம்" என்று கூறியுள்ள தனுஜா, ஒருவேளை கணவர் மீது குற்றம் சுமத்தப்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட பெண் என்ன சொல்கிறார் என்று சிலப்பதிகாரம் கண்ட தமிழ்நாடு காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், தனது கல்வி மற்றும் வசதிகளை எப்போதும் வெளிக்காட்டிக் கொள்ளாத சங்கீதாவையும், அவர் சார்ந்த இலங்கைத் தமிழ் மண்ணையும் இழிவுபடுத்துவதை ரசிகர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது வீடியோவில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"