BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நடிகை த்ரிஷா குறித்து பாடகி சுசித்ரா பரபரப்பு கருத்து

நடிகை த்ரிஷா குறித்து பாடகி சுசித்ரா பரபரப்பு கருத்து

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாகத் திகழும் நடிகை த்ரிஷா சமீப காலமாக மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள கருத்து மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்திய காணொளி ஒன்றில் பேசிய சுசித்ரா, த்ரிஷா முகம் ஒட்டியபடி மெலிந்திருப்பதற்கான காரணம் அவர் பயன்படுத்தும் “ஒசம்பிக்” எனப்படும் மருந்து எனக் கூறியுள்ளார். இந்த மருந்து டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஊசி வடிவ மருந்தாகும். அதேசமயம், உடல் எடை குறைப்பதற்கும் சிலர் இதைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

சுசித்ராவின் கூற்றுப்படி, இந்த மருந்தை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவதால் உடல் எடை வேகமாக குறையக்கூடும் என்றும், அதனால் முக அமைப்பிலும் மாற்றம் தென்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பல பிரபலங்களும் இந்த மருந்தை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், த்ரிஷா தொடர்பான தனிப்பட்ட விவகாரங்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவற்றில் எதற்கும் அவர் இதுவரை பதிலளிக்கவில்லை. சுசித்ரா வெளியிட்டுள்ள இந்தக் கருத்து எவ்வளவு உண்மை என்பதற்கு த்ரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வருமா என்பதையே ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"