BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் டீசல் பதுக்கல்: இருவர் கைது, லீட்டர் பறிமுதல்

யாழ்ப்பாணத்தில் டீசல் பதுக்கல்: இருவர் கைது, லீட்டர் பறிமுதல்

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று அதிகாலை சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டீசல் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது சந்தேகநபர்கள் வசமிருந்த 800 லீட்டர் டீசல் மற்றும் அதனை பதுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் சட்டவிரோதமாக எரிபொருள் சேமித்து விற்பனை செய்ய முயன்றதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"